இந்தியா

இந்த கொடூர தாக்குதலுக்கு பழிதீர்க்கப்படும் - சி.ஆர்.பி.எப்

இந்த கொடூர தாக்குதலுக்கு பழிதீர்க்கப்படும் - சி.ஆர்.பி.எப்

webteam

காஷ்மீர் தாக்குதலை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம் என்று மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்தியாவையே கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது காஷ்மீர் தாக்குதல். காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட  மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் பயணம் செய்தனர். அவர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். 

இதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் இறந்துள்ளதாக சி.ஆர்.பி.எப் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு இந்திய மக்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ள மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படை, கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த ட்வீட்டில், தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம். அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதலை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். இந்த கொடூர தாக்குதலுக்கு பழிதீர்க்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

முன்னதாக  இந்த தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் மோடி எதிரிகள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார்கள். இதற்கு ஈடாக அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்து இருந்தார்.