இந்தியா

திருப்பதி லட்டு விலை உயர்கிறது !

webteam

திருப்பதி கோயிலில் லட்டு விலையை உயர்த்துவது குறித்து தேவஸ்தான நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருப்பதியில் வெங்கடாஜலபதியை வணங்கிச் செல்லும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10-க்கு 2 லட்டுகளும், மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ.10-க்கு 2 லட்டுகளும், ரூ.25-க்கு 1 லட்டு என கூடுதலாக வழங்கப்படுகின்றன. இது தவிர்த்து ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் லட்டு விலையை உயர்த்துவது குறித்து தேவஸ்தான நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. ஒரு லட்டு தயாரிக்க 37 ரூபாய் செலவாகும் நிலையில், அதை விட குறைவான விலைக்கே பக்தர்களுக்கு விற்கப்படுவதாகவும் இதனால் ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் நிதித்துறை அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர். இதையடுத்து லட்டு விலை உயர்த்த தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.