இந்தியா

திருப்பதி கோயிலில் தாக்கப்பட்ட பக்தர் மரணம்

திருப்பதி கோயிலில் தாக்கப்பட்ட பக்தர் மரணம்

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பாதுகாவலர்களால் தாக்கப்பட்டு காயமடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்தார். 98 நாட்களாக தேவஸ்தான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாபன். மார்ச் மாதம் தனது‌ குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய திருமலைக்குச் சென்றார். உடைமைகளை ஸ்கேன் செய்யும் இடத்தில் பாதுகாவலர்கள் பத்மநாபனை பிடித்து தள்ளியதாக் கூறப்படுகிறது. அதனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை, பாதுகாவலர்கள் தாக்கியதாகவும், அதனால் மயங்கி விழுந்த பத்மநாபனுக்கு தேவஸ்தான மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் உயிரிழந்தார்.
பத்மநாபனின் உயிரிழப்புக்கு தேவஸ்தான அதிகாரிகளே காரணம் என்றும், தாக்கிய பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.