ஸ்வப்னா ஜோஷி கூகுள்
இந்தியா

இயக்குநரின் வீட்டிற்குள் நுழைந்த திருடன்; எச்சரித்த பூனையால் தடுக்கப்பட்ட திருட்டு சம்பவம்

மராத்தி இயக்குநரான ஸ்வப்னா ஜோஷி மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை குடும்பத்தினர் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒருவர் இவரது வீட்டின் வடிகால் குழாய் வழியாக ஏறி உள்ளே திருட வந்துள்ளார்.

Jayashree A

இயக்குநரின் வீட்டிற்குள் நுழைந்த திருடன், அனைவரும் தூங்கும் சமயத்தில் பொருட்களை திருட நினைத்துள்ளார். ஆனால் பூனைக்கொடுத்த எச்சரிக்கை ஒலியால் திருடன் தப்பித்து சென்றுவிட்டார்.

மராத்தி இயக்குநரான ஸ்வப்னா ஜோஷி மும்பை அந்தேரி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில், குடும்பத்தினர் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, டி ஷர்ட் , ஷார்ட்ஸ் அணிந்த ஒருவர் இவரது வீட்டின் வடிகால் குழாய் வழியாக ஏறி ஜன்னல் வழியாக உள்ளே திருட வந்துள்ளார்.

வீட்டில் இருக்கும் பொருட்கள், ஹால் என்று ஒவ்வொன்றாக பார்த்து வந்தவர், ஒரு அறையிலிருந்து ரூபாய் 6000 பணத்தை திருடி இருக்கிறார். மேலும் இவர் திருட எண்ணிய சமயம் அவர்கள் வீட்டிலிருந்த வளர்ப்பு பூனையானது, அதிபயங்கரமாக கத்தி அனைவரையும் எழுப்பியுள்ளது. இதைப்பார்த்து பயந்த திருடன், வீட்டிற்குள் வந்த வழியாகவே வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

ஆபத்து என்று பூனை கத்துவதைக்கண்டு உறவினர்களும் அறையை விட்டு வெளியே வந்தபோதுதான் தெரிந்தது வீட்டிற்குள் திருடன் ஒருவன் நுழைந்திருக்கிறான் என்று... நல்லவேளையாக பூனையின் எச்சரிக்கையால் விலை அதிகமான பொருட்கள் எதையும் திருடனால் திருடிக்கொண்டு போகமுடியவில்லை.

அதன்பிறகு நடந்த சம்பவம் குறித்து ஸ்வப்னா ஜோஷி மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிவிடியின் உதவியால் திருடன் யார் என்று பார்த்ததுடன், வீட்டிற்கு அதிகப்படியான பாதுகாப்பை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.