நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கடந்த 3 வருடத்தில் 5 எம்.பி.க்கள் மட்டுமே கூட்டம் நடந்த எல்லா நாட்களிலும் சபைக்கு வந்துள்ளனர்.
பாரதிய ஜனதாவை சேர்ந்த பைரன் பிரசாத் மிஸ்ரா (உ.பி.), கோபால் ஷெட்டி (மகாராஷ்ட்ரா), கிரித் சோலங்கி (குஜராத்), ரமேஷ் சந்தர் கவுசிக் (ஹரியானா) குல்மானி சமல் (ஒடிசா) ஆகியோர் மட்டுமே எல்லா நாட்களும் சபைக்கு வந்துள்ளனர்.
பைரன் பிரசாத் மிஸ்ரா 1,468 விவாதம், கேள்விகளில் பங்கேற்று முதலிடத்தில் இருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வருகை 59 சதவிகிதமும், ராகுல் காந்தியின் வருகை 54 சதவிகிதமும் பதிவாகி உள்ளது. 25 சதவிகித எம்.பி.க்களே, 90 சதவிகிதத்துக்கும் அதிகமான நாட்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை புரிந்து உள்ளனர்.