இந்தியா

நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது: ஆ.ராசா

நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது: ஆ.ராசா

webteam

2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், நீதித்துறை மீது தனக்கு நம்பிக்‌கை இருப்பதாக அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கூறி இருக்கிறார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி கனிமொழி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பான பல்வேறு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இறுதி தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, தான் நீதிபதி அல்ல என்றும் சட்டத்தை மதித்து நடக்கும் ஒரு குடிமகன் என்றும் கூறியுள்ளார். மேலும், இதில் எதிர்பார்க்க ஒன்றும் இல்லை என்றும், நமது நாட்டின் நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக சிறப்பு நீதிமன்றத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளதாகவும், தீர்ப்பு வரும் வரை பொறுமையாக காத்திருப்போம் என்றும் ஆ.ராசா தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி மற்றும் ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.