இந்தியா

காலதாமதமாக நீதி வழங்கக் கூடாது: வெங்கய்ய நாயுடு

காலதாமதமாக நீதி வழங்கக் கூடாது: வெங்கய்ய நாயுடு

jagadeesh

எப்படி உடனடியாக நீதி வழங்க முடியாதோ, அதுபோல காலதாமதமாகவும் நீதி வழங்கக் கூடாது என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். 

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற என்கவுன்ட்டரும் நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. ராஜஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, உடனடியாக வழங்கப்படும் நீதி, அதன் தன்மையை இழந்துவிடும் என்றார். 

இந்நிலையில் டெல்லி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். எப்படி உடனடியாக நீதி வழங்க முடியாதோ, அதுபோல காலதாமதமாகவும் நீதி வழங்கக் கூடாது என்றார். நீதி தாமதமானால், மக்களின் கோபம் அதிகரிப்பதோடு, சட்டத்தை கையில் எடுக்கும் நிலையும் உருவாகும் என்றார். நீதித்துறை நடவடிக்கைகள் எளிமையாகவும், உள்ளூர் மொழிகளிலும் இருந்தால்தான் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.