இந்தியா

திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்களை திறக்க இன்று முதல் அனுமதி

திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்களை திறக்க இன்று முதல் அனுமதி

jagadeesh

பொதுமுடக்கத்தின் ஐந்தாம் கட்ட தளர்வுகள், இன்று முதல் அமலுக்கு வருவதையொட்டி திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள் திறக்கப்படுகின்றன.

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.‌ அதன் பின், பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், நான்கு கட்டங்களாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்‌பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமுடக்கத்தின் ஐந்தாம் கட்ட தளர்வுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

தனிக் கட்டடங்களில் இயங்கும் திரையரங்குகள், மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கேளிக்கை விடுதிகளை திறக்கவும் மத்திய அரசு அனுமதியளித்தது. பள்ளிகள் மற்றும்‌ நீச்சல் குளங்களை திறக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இவற்றை செயல்படுத்த அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் திறக்கப்படுகின்றன. எனினும், தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கு இதுவரை அரசு அனுமதி அளிக்கவில்லை.