இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

JustinDurai
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராடிய நிலையில் அவற்றை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்களை கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நீட் தேர்விலிருந்து விலக்கு, மீனவர்கள் பிரச்னை, நதிநீர்ப் பங்கீடு பிரச்னை உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு எம்.பிக்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்தை விரைந்து வழங்குமாறும் கோரிக்கை வைக்கப்படும் என தெரிகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே இன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 23ஆம் வரை நடைபெற உள்ளது.