இந்தியா

முல்லைப்பெரியாறில் நீர்திறப்பு அதிகரிப்பு

webteam

கேரளாவின் கோரிக்கையை ஏற்று முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை தமிழகஅரசு உயர்த்தியுள்ளது.

தொடர் கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கான நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் மூன்றாம் முறையாக 142 அடியாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்க ஒத்துழைப்பு தருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார். 

அணைக்கு வரும் நீர்வரத்தை அளவிடும் டிஜிட்டல் கருவிகள் சரிவர இயங்காததால் பழைய முறைப்படி ஆட்கள் மூலம் நீர்வரத்து கணக்கிடப்படுவதாகவும், இதனால் நீர்வரத்தை துல்லியமாக அளவிட இயலவில்லை என்றும் பினராயி தெரிவித்திருந்தார். எனவே அணையின் பாதுகாப்பை கருதி நீர்இருப்பை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசை அவர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இக்கோரிக்கையை ஏற்று அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 11 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.