இந்தியா

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க 4-வது முறையாக அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க 4-வது முறையாக அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு

EllusamyKarthik

ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதியோடு முடிவடையுள்ள நிலையில் அதை வரும் மார்ச் 31, 2021 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 

ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் காலக்கெடுவை நான்காவது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளது மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம். இதற்கு முன்னர் மார்ச் 30, ஜூன் 9 மற்றும் ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகளில் இதை அரசு நீட்டித்து அறிவித்தது. 

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த நீட்டிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது மத்திய அமைச்சகம். அதன்படி 2020 பிப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து காலாவதியான வாகனங்களுக்கான தகுதிச்சான்று, அனைத்துவிதமான பெர்மிட், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு செய்தல் உள்ளிட்ட மோட்டார் வாகனச்சட்ட விதியின் கீழ்வரும் ஆவணங்கள் அனைத்தும் புதுப்பிக்கும் தேதி 2021, மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது மத்திய அமைச்சகம்.