இந்தியா

அரசு நிதி ரூ.1000 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு மாற்றிய வழக்கு சிபிஐக்கு மாற்றம்

அரசு நிதி ரூ.1000 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு மாற்றிய வழக்கு சிபிஐக்கு மாற்றம்

webteam

பீகாரில் ஆயிரம் கோடி ரூபாய் அரசு நிதியை, ஸ்ரீஜன் மகிளா விகாஸ் சமிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ எடுத்துக்கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சிபிஐ 10 முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணையை எடுத்துக்கொள்ளும்படி மத்திய அரசு சிபிஐக்கு அறிவுறுத்தியிருந்தது. வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் இன்று சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீஜன் நிறுவனத்தின் செயலாளர் பிரியா குமார் மற்றும் அவரது கணவருக்கு பீகார் அரசு ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளது. 
பீகார் அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 950 கோடி ரூபாயை போலி கையெழுத்துகளுடன் உள்ள காசோலைகள் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு திருப்பி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.