இந்தியா

புதுச்சேரியில் மத்தியக் குழு இன்று ஆய்வு

புதுச்சேரியில் மத்தியக் குழு இன்று ஆய்வு

webteam

புதுச்சேரி மாநிலத்தில், வறட்சி பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று, மத்திய வேளாண்துறை இணை செயலாளர் ராணி குமுதினி தலைமையிலான 9 பேர் கொண்ட குழு, புதுச்சேரிக்கு நேற்று வந்தது. புதுச்சேரி தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தலைமையில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். அப்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அதிகாரிகள், மத்தியக் குழுவினரிடம் காட்டி பாதிப்புகள் குறித்து விளக்கினர். அதன் தொடர்ச்சியாக இன்று இரு அணிகளாக பிரிந்து காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் வறட்சியால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு செய்யவுள்ளது. இதனையடுத்து இக்குழு மத்திய அரசுக்கு வறட்சி குறித்து அறிக்கை தாக்கல் செய்யும். அதனடிப்படையில் மத்திய அரசு, புதுச்சேரிக்கு நிவாரணம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசை பொறுத்தவரை ரூ.100 கோடிக்கு மேல் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.