இந்தியா

முன்கூட்டியே முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

முன்கூட்டியே முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

JustinDurai
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஒருநாள் முன்கூட்டியே முடிவுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்கும் மசோதாக்கள் இத்தொடரில் நிறைவேறின. இது தவிர செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவும் இத்தொடரில் நிறைவேறியது. பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் 12 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு அவைகளின் அலுவல்கள் இந்தத் தொடரில் பெரிதும் பாதிக்கப்பட்டன. மேலும் லக்கிம்பூர் விவகாரத்தில் அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் அவையை முடக்கின. நாடாளுமன்ற தொடர் நாளையுடன் முடிக்க அரசு திட்டமிட்டிருந்த நிலையில் அது இன்றே முடித்துக்கொள்ளப்பட்டது.