இந்தியா

மீனவர்களை நினைத்து தேசம் பெருமை கொள்கிறது : பிரதமர் மோடி

மீனவர்களை நினைத்து தேசம் பெருமை கொள்கிறது : பிரதமர் மோடி

webteam

மீனவர்களை நினைத்து தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத்திட்டத்தை கொண்டிருக்கிறது இந்தியா. இந்தியா சமூக, பொது உள்கட்டமைப்புகளை அதிவிரைவாக மேம்படுத்தி வருகிறது. அவர்களுக்கான கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. மீனவர்களுக்கு கூடுதலாக கடன் வழங்க பட்ஜெட்டில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கடற்பாசி வளர்ப்புக்கு என தமிழகத்தில் புதிய பூங்கா உருவாக்கப்படும்.

இதேநாளில் புல்வாமா தாக்குதலில் நாம் நமது வீரர்களை இழந்தோம் என்பதை நாம் மறக்கக்கூடாது. நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை கண்டு நாம் பெருமைப்பட வேண்டும். தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 7 உட்பிரிவை சேர்ந்தவர்கள் இனி தேவேந்திர குல வேளாளர்கள் என அழைக்கப்படுவர்.நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி தானிய உற்பத்தியில் சாதனை புரிந்துள்ளது தமிழ்நாடு. மீனவர்களை நினைத்து தேசம் பெருமை கொள்கிறது.

இலங்கை வாழ் தமிழ் சகோதர, சகோதரிகளின் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. வடகிழக்கு இலங்கையில் குடிபெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இலங்கை தலைவர்களிடம் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி வந்துள்ளோம்.

யாழ்பாணத்துக்கும், மன்னாருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.