இந்தியா

தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தின் டெண்டர் ரத்து - மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவு

தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தின் டெண்டர் ரத்து - மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவு

webteam

தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

கிராமங்களில் அதிவேக இண்டர்நெட் இணைப்பு தரும் விதமாக பாரத்நெட் திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. இதன்படி 1950 கோடி ரூபாயில் 12524 கிராம ஊராட்சிகளை ஃபைபர் கேபிள் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பாரத் நெட் டெண்டரில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம், திமுக குற்றம் சாட்டி இருந்தன. நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது.

இந்நிலையில், டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி, தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் குறைகளை களைந்து மீண்டும் டெண்டர் விட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது