இந்தியா

இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன்: பஞ்சாப், கோவாவில் தெளிவாக தெரிந்த 'ஸ்ட்ராபெரி மூன்'

இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன்: பஞ்சாப், கோவாவில் தெளிவாக தெரிந்த 'ஸ்ட்ராபெரி மூன்'

JustinDurai

ஆண்டின் கடைசி சூப்பர் மூன் , ஒடிசா, பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தெளிவாக தெரிந்தது.

ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும் இந்த பெருநிலவு, ஸ்ட்ராபெரி மூன் என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வந்த அழகான வானியல் நிகழ்வை, ஒடிசா மாநிலம் புரி நகரில் தெளிவாக காண முடிந்தது. பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஸ்ட்ராபெரி மூன் தெளிவாக தெரிந்தது. பல மாநிலங்களில் மழை , மேகமூட்டம் காரணமாக நிலவு முழுமையாக தெரியவில்லை.