இந்தியா

லடாக்கில் சிந்து நதியின் மீது புதிய பாலம் அமைத்த இந்திய ராணுவம்! வைரல் வீடியோ!

லடாக்கில் சிந்து நதியின் மீது புதிய பாலம் அமைத்த இந்திய ராணுவம்! வைரல் வீடியோ!

webteam

லடாக்கில் சிந்து நதியின் மீது இந்திய ராணுவத்தின் பொறியாளர் குழுவினர் பாலம் ஒன்றை அமைத்துள்ளனர்.

லடாக் செக்டாரில் பாயும் சிந்து நதியின் மீது, ராணுவத்தின் கனரக வாகனங்கள் செல்லும்வகையில் பாலம் அமைக்க பொறியாளர்கள் திட்டமிட்டு வந்தனர். இதற்காக புதிய தொழில்நுட்பத்தையும் ஆய்வு செய்து வந்தனர். இதன் பலனாக, கண்டெய்னர் அளவுக்கு இரும்புத்துண்டுகளை பிரத்யேகமாக வடிவமைத்தனர்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/PWYZHn1UIGg" title="சிந்து நதியின் மீது வாகனங்கள் செல்ல பாலம் அமைத்த ராணுவம்" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

அவற்றைசிந்து நதியின் மீது அடுத்தடுத்து அடுக்கடுக்காக போட்டு, இணைத்து பாலத்தை அமைத்தனர்.

அந்தப் பாலத்தின் மீது தற்போது இந்திய ராணுவத்தின் வாகனங்கள் பயணிக்கின்றன. பாலம் அமைக்கப்பட்ட காட்சிகளையும், அதன் மீது ராணுவ வாகனங்கள் செல்லும் காட்சிகளையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.