தங்கம் விலை குறைவு Pt
இந்தியா

மீண்டும் இறங்கிய தங்கத்தின் விலை.. ஒரே நாளில் இவ்வளவா?... இன்னும் விலை இறக்கம் இருக்குமா?

Jayashree A

பட்ஜெட் தாக்கலின் எதிரொலியாக தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரன் 2200 சரிந்தது.

சென்னையில் இன்று மதிய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2200 குறைந்து ரூ.52400 க்கு விற்பனை ஆகிறது.

இன்று காலையில் நிதியமைச்சர் சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது தங்கம் மற்றும் வெள்ளி, ப்ளாட்டினம் மீதான சுங்கவரியை குறைத்தார்.

இதை அடுத்து, அடுத்த சில மணி துளிகளில் தங்கமானது விலை சரியத்தொடங்கியது. அதன்படி, காலை நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.15 விலை குறைந்து 6810 ஆகவும், பவுன் ஒன்று ரூ 54480க்கு விற்கப்பட்டதை நாம் கூறியிருந்தோம்.

பட்ஜெட் எதிரொலி- தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைவு

மதிய நிலவரம்

ஆனால் இன்று மதிய நிலவரப்படி தங்கமானது மேலும் சரிவைக்கண்டு, கிராமிற்கு ரூ.275 குறைந்து ரூ6550க்கும் சவரன் ரூபாய் 2200 குறைந்து 52400க்கும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு 3.50 குறைந்து கிராம் ஒன்றுக்கு ரூ92.50க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இது மேலும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.