இந்தியா

ஆன்லைனில் உடனடி பான்கார்டு வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்

ஆன்லைனில் உடனடி பான்கார்டு வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்

webteam

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றிலும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் உரையின்போது தெரிவித்துள்ளார்.

பட்டியலின வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலனுக்கு 2020-21-ல் ரூ.85,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பழங்குடியினர் நலனுக்கு ரூ.53,700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாவும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு 9,500 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மகளிர் நலத்திட்டங்களுக்கென 28,600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் தூய்மை இந்தியா திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.12,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றிலும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2020-21 ஆம் நிதியாண்டில் ஊட்டச் சத்துத் திட்டங்களுக்கு 35,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கட்டுமான நிறுவனங்களின் லாபத்திற்கு ஓராண்டு வரிச் சலுகை அறிவித்த நிதியமைச்சர், உடான் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 2024-க்குள் மேலும் 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்றார். ஆதார் கார்டு பயன்படுத்தி ஆன்லைனில் பான் கார்டு உடனடியாக வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.