இந்தியா

ஆட்சிக்கு வந்ததும் முத்தலாக் தடை சட்டம் ரத்து: காங்கிரஸ்

ஆட்சிக்கு வந்ததும் முத்தலாக் தடை சட்டம் ரத்து: காங்கிரஸ்

webteam

காங்கிரஸ் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் முத்தலாக் மசோதாவை நீக்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவர் சுஷ்மிதா தேவ் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் அந்தக் கட்சியின் மகளிரணித் தலைவி சுஷ்மிதா தேவ் பேசும்போது, “முத்தலாக் சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறது. முத்தலாக் சட்டம் பெண்களை வலி மைப்படுத்தும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், முஸ்லிம் ஆண்களை சிறையில் தள்ளவும் அவர்களை காவல் நிலையங்களில் நிற்க வைக்க வேண்டும் என்பதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்ட ஆயுதம்தான் இந்த முத்தலாக் தடை சட்டம். 

இதற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம் பெண்கள் போராட்டம் நடத்தியதையும் கையெழுத்து இயக்கம் நடத்தியதையும் வரவேற்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் இந்த முத்தலாக் சட்டம் நீக்கப்படும்” என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, ஒரு சாராரை திருப்திப்படுத்த காங்கிரஸ் கட்சி செயல்படுவதாகவும் இதற்காக அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நாட்டு மக்களும் முஸ்லிம் பெண்களும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் விமர்சித்துள்ளது.