லடாக் முகநூல்
இந்தியா

லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள்! அறிவிப்பினை வெளியிட்டார் மத்திய அமைச்சர் அமித்ஷா!

யூனியன் பிரதேசமான லடாக்கில் சன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் என்ற 5 புதிய மாவட்டங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

யூனியன் பிரதேசமான லடாக்கில் சன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் என்ற 5 புதிய மாவட்டங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலமானது லாடாக் மற்றும் ஜம்மு - காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

லடாக்கைப் பொறுத்தவரை, லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் இருந்தது. யூனியன் பிரதேசமாக இருப்பதால்,லடாக் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்த சூழலில்,தற்போது லடாக் யூனியன் பிரதேசத்தில் புதியதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

” வளர்ந்த மற்றும் வளமான லடாக்கை உருவாக்குவதற்கான பிரதமர் நரேந்திர மோடியில் தொலைநோக்குப் பார்வையைப்பின்பற்றும் வகையில், யூனியன் பிரதேச மான லடாக்கில் இன்று ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க MHA முடிவு செய்துள்ளது.

புதிய மாவட்டங்களான சன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஆட்சியை வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கான நன்மைகள் அவர்களின் வீட்டு வாசலிலேயே வந்து சேரும். லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் செப்டம்பர் 18-ம் தேதி,செப். 25-ம் தேதி, அக். 1-ம் தேதி என மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.