இந்தியா

பள்ளிகளில் இனி தினமும் கட்டாயம் விளையாடலாம்: சிபிஎஸ்இ அதிரடி

பள்ளிகளில் இனி தினமும் கட்டாயம் விளையாடலாம்: சிபிஎஸ்இ அதிரடி

webteam

மாணவர்கள் உ‌டலுழைப்பி‌‌ன்றி இருப்பதை தடுப்‌பதற்காக சிபிஎஸ்இ பள்ளிகளில் தினமும் விளையாட்டு நேரம் இடம்பெற வேண்டும் என சிபிஎஸ்இ புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்‌களுக்கான விளையாட்டு பயிற்சி முறைகள், அவற்றை செயல்படுத்து‌வது எப்படி என்பது குறித்த 150 பக்க விதிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதன் படி அனைத்து பள்ளிகளிலும் ‌9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தினமும் விளையாட்டு நேரம் ஒதுக்கப்படும். இந்த விளையாட்டு நேரம் முந்தைய உடற்கல்வி பாடத்தில் இருந்து மாறுபட்டது என தெரிவித்துள்ள அதிகாரிக‌ள், இதற்கு தனியாக விளையாட்டு ஆசிரியர்கள் தேவை இல்லை என்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களை ஊக்குவிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு இந்த விளையாட்டு நேரம் கொண்டு வரப்பட்டுள்ளது. விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள விளையாட்டு மற்றும் பயிற்சிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படு‌‌ம் என்றும், அவை பொதுத்தேர்வை எழுதுவதற்கான தகுதிக்கான மதிப்பெண்ணாக கருதப்படும் என்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.