புதுச்சேரி முகநூல்
இந்தியா

பரபரப்பான புதுச்சேரி அரசியல் களம்! இன்று தொடங்குகிறது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்!

புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழலில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையுடன் தொடங்குகிறது.

PT WEB

புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழலில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையுடன் தொடங்குகிறது.

புதுச்சேரிக்கு புதிய துணைநிலை ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே புதுச்சேரி வருவார் என எதிர்பார்க்கப்படுவதால், சி. பி. ராதாகிருஷ்ணன் ஆளுநர் உரையை வாசிப்பார்.

ஆளுநர் உரை முடிந்த பின்னர் அலுவல் ஆய்வுக்கூட்டம் கூடி பேரவை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும். இதனைத்தொடர்ந்து, இரவு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். நாளை மறுநாள் நிதியமைச்சர் பொறுப்பையும் தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் 12,700 கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

இதனிடையே மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணித்தது, ரேசன்கடைகள் விவகாரம், ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி கூட்டணியில் உள்ள பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கிய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.