இந்தியா

“போலீசாரின் துப்பாக்கியை பறித்தனர்...”- தெலங்கானா என்கவுன்ட்டரை விவரிக்கும் துணை ஆணையர்..!

“போலீசாரின் துப்பாக்கியை பறித்தனர்...”- தெலங்கானா என்கவுன்ட்டரை விவரிக்கும் துணை ஆணையர்..!

webteam

காவல்துறையினரின் துப்பாக்கியை பறித்து அவர்கள் சுட முயன்றார்கள். அதனால்தான், காவலர்கள் அவர்களை சுட்டனர் என்று ஷம்சாபாத் காவல்துறை துணை ஆணையர் பிரகாஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த 27-ஆம் தேதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. 
இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என போலீஸார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர். அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து ஷம்சாபாத் பகுதியின் துணை ஆணையர் பிரகாஷ் ரெட்டி கூறும்போது, “சைபராபாத் பகுதி காவல்துறையினர் அந்த நான்கு நபர்களையும் குற்றம் நடந்த இடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு எவ்வாறு குற்றம் நடந்தது என்று அவர்களிடம் காவல்துறையினர் கேட்டப்போது அவர்கள் காவல்துறையினரின் துப்பாக்கியை பறித்து சுட முயன்றனர். அப்போது தற்காப்பிற்காக காவல்துறையினர் இந்த நான்கு பேரையும் சுட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.