இந்தியா

அமர்நாத் தீவிரவாத தாக்குதல் - மோடி கடும் கண்டனம்

அமர்நாத் தீவிரவாத தாக்குதல் - மோடி கடும் கண்டனம்

webteam

அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலே பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 19 பேர்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பனி சூழ்ந்த மலைகளுக்கு நடுவே, இயற்கையாக உருவாகியுள்ள குகை ஒன்றில், தானாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு
முழுவதும் இருந்து, இந்துக்கள் புனித யாத்திரை, மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான வருடாந்திர அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 29ந்தேதி தொடங்கியது. 4
ஆயிரம் பக்தர்களை கொண்ட முதல் குழு, ஜம்முவில் இருந்து பயணத்தை தொடங்கினர். இந்நிலையில் காஷ்மீரின் அனந்த்நாக் அருகே யாத்ரீகர்கள் சென்ற பேருந்தை
குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலே யாத்ரீகள் 7 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 19 பேர் அருகே இருக்கும்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக 150 யாத்ரீகர்களையும், 100 காவல்துறையினரையும் தீவிரவாதிகள் இலக்காக்கி கொல்ல இருப்பதாக சமூக
வலைதளங்களிலும் தகவல் கசிந்தது. இதையடுத்து யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்பு பணியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோழத்தனமான இவ்வகையான தாக்குதலுக்கு என்றுமே இந்தியா அடிப்பணிந்து போகாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.