இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் கணிசமாக குறைந்திருக்கிறது: மத்திய அரசு தகவல்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் கணிசமாக குறைந்திருக்கிறது: மத்திய அரசு தகவல்

kaleelrahman

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் கணிசமாக குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், 2018 ஆம் ஆண்டுக்குப் பின் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் கணிசமாக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாத ஊடுருவல் சம்பவங்கள் 143 ஆக இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டில் 141 ஆகவும், 2020 ஆம் ஆண்டில் 51 ஆகவும் குறைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் 2018 ஆம் ஆண்டில் 417 ஆக இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு 255 ஆகவும், 2020-ல் 244 ஆகவும் குறைந்து, தற்போது 200 ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் வரை 165 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.