இந்தியா

பேஸ்புக் பதிவால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை அர்ச்சகர்

பேஸ்புக் பதிவால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை அர்ச்சகர்

webteam

கேரளாவின் தேவஸ்தான அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்டதால் அர்ச்சகர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

கேரளாவின் லபார் தேவஸ்தான வாரியத்துக்கு கட்டுப்பட்டது கஞ்சன்காடு பகுதியில் உள்ள மதியன் கூலம் சேத்திர பாலகா கோயில். இந்த கோவிலின் தலைமை அர்ச்சகராக இருந்தவர் டி மாதவன் நம்பூதிரி. தேவஸ்தான அமைச்சரை விமர்சனம் செய்ததாக மாதவன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 18ம் தேதி பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்றபோது, போலீஸார் அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு டி மாதவன் நம்பூதிரி கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தார். கேரளாவின் தேவஸ்தான அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனை விமர்சித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டார் மாதவன். மாதவனின் கருத்து அனைவராலும் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகவே மாறியது. 

(தேவஸ்தான அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன்)

இந்நிலையில் அமைச்சரை விமர்சனம் செய்து கருத்துகளைப் பதிவிட்ட மாதவன் நம்பூதிரியை இடைநீக்கம் செய்ய தேவஸ்தான வாரியக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான உத்தரவு கடிதத்தை கோயில் நிர்வாக அதிகாரி விஜயன் அளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாலக சேத்திர கோயிலின் பரம்பரை அர்ச்சகரான தன்னை நீக்க முடியாது என மாதவன் வாதிட்டுள்ளார். 

கடந்த 18ம் தேதி பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட இருவரை கேரளா போலீசார் கைது செய்தனர். பின்னர் சுரேந்திரன் உள்ளிட்ட சபரிமலை வழக்கில் தொடர்புடைய 72 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.