இந்தியா

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு

Rasus

ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இதனிடையே ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு தெலுங்கு தேசம் கட்சியினர் மீது தாக்குதல் உள்ளிட்ட அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்குதேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேரணி நடத்த முயன்ற தெலுங்குதேசம் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.