இந்தியா

இளைஞர்களை நீரில் மூழ்கடித்து கொடுமைப்படுத்திய பாஜக தலைவர்: வைரலாகும் வீடியோ

இளைஞர்களை நீரில் மூழ்கடித்து கொடுமைப்படுத்திய பாஜக தலைவர்: வைரலாகும் வீடியோ

webteam

தெலங்கானாவில் இளைஞர்கள் இருவரை பாஜக உள்ளூர் தலைவர் ஒருவர், நீரில் மூழ்கடித்து கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள அபாங்காபட்டணம் என்ற கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர்கள் ராஜேஸ்வர் மற்றும் லக்‌ஷ்மன். இந்த இரண்டு இளைஞர்களும் அப்பகுதியில் உள்ள எறகுண்டா என்ற ஏரியில் இருந்து மணல் அள்ளிய வண்டியை தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணல் அள்ளிய வண்டியின் ஓட்டுநர்கள் உள்ளூர் பாஜக தலைவர் பாரத் ரெட்டியிடம் கூறியுள்ளனர். 

இதையடுத்து அந்த இரண்டு இளைஞர்களையும் மிரட்டிய பாரத் ரெட்டி, அவர்களை குட்டை ஒன்றில் மூழ்க வேண்டும் என நிர்பந்தித்துள்ளார். அவ்வாறு தண்ணீரில் மூழ்காவிட்டால், அவர்களை கடுமையாக தாக்கப்போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். இதனால் அந்த இளைஞர்கள் அச்சத்தில் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவி வருகின்றன. ஆனால் இந்த சம்பவம் குறித்து புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.