தற்கொலை PT
இந்தியா

+1, +2 தேர்வு முடிவுகள் வெளியான 48 மணி நேரத்தில் 7 மாணவர்கள் விபரீத முடிவு! தெலங்கானாவில் சோகம்

+1, +2 தேர்வு முடிவுகள் வெளியான 48 மணி நேரத்தில் 7 மாணவர்கள் விபரீத முடிவு! தெலங்கானாவில் சோகம்

Jayashree A

தெலங்கானா மாநிலத்தில் +1, +2 தேர்வு முடிவுகள் வெளியான 48 மணி நேரத்தில் 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடத்தியது. இந்த தேர்வினை சுமார் 9.8 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தேர்வு முடிவுகளின்படி, 11ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 61.06 சதவீதமாகவும், 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 9.46 சதவீதமாக உள்ளது.

இதில் தோல்வியை தழுவிய மாணாவர்களில் 7 பேர் கடந்த இரு தினங்களில் தற்கொலை செய்துக்கொண்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் தற்கொலையானது நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.