model image freepik
இந்தியா

தெலங்கானா: ’நல்லி எலும்பு இல்லை’ - பெண்வீட்டாரிடம் சண்டைபோட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பம்

Prakash J

தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

திருமணத்தைப் பாரம்பரியமாகவும் ஆடம்பரமாகவும் நடத்த இருவீட்டாரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மணமகளின் குடும்பத்தினர் மற்றும் மணமகனின் உறவினர்களுக்கு அசைவ உணவு ஏற்பாடு செய்தனர். விருந்தில் மணமகன் குடும்பத்தினர் கூறியிருந்த நல்லி எலும்பு கறி இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

model image

இதனால், மணமகளின் தம்பிக்கும் மணமகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த மணமகன் குடும்பத்தினர், பெண் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். அப்போது, நல்லி எலும்புக் கறி வைக்காமல் பெண் வீட்டார் தங்களை அவமதித்துவிட்டதாக கூறி மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.