ஹீட்டரால் உயிரிழந்த தெலங்கானா நபர் ட்விட்டர்
இந்தியா

தெலங்கானா | தீடீரென வந்த போன்கால்.. வாட்டர் ஹீட்டரில் பாய்ந்த மின்சாரம்.. பரிதாபமாக உயிரிழந்த நபர்!

தெலங்கானாவில் தனது செல்லப்பிராணியை குளிப்பாட்டுவதற்காக வெந்நீர் வைக்க மின்சார ஹீட்டர் கம்பியை பயன்படுத்திய நபர், அதை தவறுதலாக, தனது கையின் அடியில் வைத்ததால், மின்சார தாக்கி பரிதாபாமாக உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சற்றும் எதிர்ப்பாராத மரணங்கள், மீளா முடியாத இழப்புகளுக்கு வழிவகுக்கும். யாருக்கு எப்பொழுது, என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தவகையில்தான், தெலங்கானாவில் வெந்நீர் வைக்க சென்ற நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் நகரில் உள்ள அனுமன் கோயில் அருகே வசித்து வந்தவர் தோனேப்புடி மகேஷ் பாபு. தனது செல்லப்பிராணியின் மீது அதீத அக்கறை கொண்டிருந்த இவர், நேற்று மாலை தனது செல்லப்பிராணியை குளிப்பாட்டுவதற்காக water heating rod-ஐ பயன்படுத்தி வெந்நீர் போட்டுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் சூடாகி விட்டதா? என்று பார்க்க சென்றுள்ளார் மகேஷ் பாபு. அப்போதென்று பார்த்து, போன் கால் ஒன்று வந்துள்ளது. போன் காலில் யார் என்று மும்மரமாக பார்த்து கொண்டிருந்த மகேஷ் பாபு, மற்றொரு கையில் வெந்நீர் தயாரித்து கொண்டிருந்த water heating rod-ஐ எடுத்து, தவறுதலாக தனது கையின் அடியில் வைத்துள்ளார்.

அப்போது, கையில் இருந்த water heating rod-ல் மின்சாரம் பாயவே, தூக்கி வீசப்பட்டுள்ளார் மகேஷ் பாபு. இதனையடுத்து, தனது கணவரின் அலறல் சத்தம் கேட்டு, அவ்விடத்திற்கு ஓடி வந்த அவரின் மனைவி துர்கா, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார். அவரை சோதித்த மருத்துவர்கள் இவர் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். இவரின் இறப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.