இந்தியா

என்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை‌‌ பதப்படுத்தி‌ வைக்க ‌உத்தரவு

என்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை‌‌ பதப்படுத்தி‌ வைக்க ‌உத்தரவு

webteam

ஐத‌ராபாத்தில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு பேரின் ‌உடல்களை பதப்படுத்தி வைக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் மருத்துவரை பாலியல் ‌வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் லாரி ஓட்டுநர்கள் முகமது ஆரிப், சென்னகேசவலு, கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைதான 4 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், கொலை எப்படி நடந்தது என்பதை நடித்துக் காட்டுவதற்காக 4 பேரையும் பெண் மருத்துவர் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது காவல்துறை. அப்போது தப்பியோட முயன்ற 4 பேரும் காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகவும் தற்காப்புக்காக 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், என்கவுன்டர்‌ செய்தது தொடர்பாக, தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் பொதுந‌ல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி‌கள், ‌சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு பேரின் ‌உடல்களை 9ஆம் தேதி மாலை 6 மணி வரை பதப்படுத்தி வைக்க தெலங்கானா‌ அரசுக்கு ‌‌உத்தரவிட்டனர்‌. மேலும் பிரேத பரிசோதனை வீடியோவை சிடி அல்லது பென் டிரைவ்-வில் நீதி‌மன்ற ‌பதிவாளரிடம் ஒப்படைக்க‌வும் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது‌.