இந்தியா

நிலத்தைப் பறித்த அதிகாரிகள்... தற்கொலை செய்த விவசாயி... அரை ஏக்கர் வழங்கிய தெலங்கானா அரசு

நிலத்தைப் பறித்த அதிகாரிகள்... தற்கொலை செய்த விவசாயி... அரை ஏக்கர் வழங்கிய தெலங்கானா அரசு

webteam

தெலங்கானா மாநிலம், காஜ்வெல் பஞ்சாயத்தைச் சேர்ந்த வெளூரு கிராமத்தில் வசித்த பயாகாரி நரிசிம்ஹலு என்ற பட்டியலின விவசாயி, தன் நிலத்தை அரசு பறித்துக் கொண்டதால் தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக மக்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன் விளைவாக, தற்போது பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்திற்கு அரை ஏக்கர் நிலத்தை தெலங்கானா அரசு இலவசமாக வழங்கியுள்ளது. ஜூலை மாதத்தில் உள்ளூர் வருவாய்த்துறையினர் அரசு கட்டடம் கட்டுவதற்காக அவரது நிலத்தை எடுத்துக்கொண்டனர். இதனை எதிர்த்த பட்டியலின விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

விவசாயி நரசிம்ஹலு 

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், விவசாயிக்கு அரசு உதவிகள் செய்யவேண்டும் என்று கோரிகை விடுத்தனர். வியாழக்கிழமையன்று பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவர் எர்ராலா சீனிவாஸ், இலவச நிலத்திற்கான ஆவணம் மற்றும் விவசாயம் செய்வதற்கான ரூ. 50 ஆயிரம் நிதியுதவியும் விவசாயி நரசிம்ஹலு குடும்பத்திற்கு வழங்கினார்.

தன்னுடைய நிலம் தொடர்பாக தன்னை 13 குண்டர்கள் மிரட்டியதாகவும் மற்றும் உள்ளூர் வருவாய்த் துறை அதிகாரிகள் மீதும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் குரல் பதிவு மூலம் விவசாயி குற்றம்சாட்டியிருந்தார். 

https://www.thenewsminute.com/article/telangana-govt-allots-15-acre-land-kin-dalit-farmer-who-killed-self-132805