சாதிவாரி கணக்கெடுப்பு முகநூல்
இந்தியா

ஆந்திரா, பீகாரை தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பில் தெலங்கானா?

ஆந்திரா, பீகாரை தொடர்ந்து தெலங்கானாவிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

PT WEB

ஆந்திரா, பீகாரை தொடர்ந்து தெலங்கானாவிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்குவதற்கான முறையான அறிவிப்பை மாநில அரசின் தெலங்கானா தலைமைச் செயலாளர் சாந்திகுமாரி வெளியிட்டார். மாநில அரசின் திட்டமிடல் துறை, சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளும் என்றும் 60 நாட்களுக்குள் பணிகள் நிறைவடையும் என்றும் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கிடைக்கும் தகவல்களை கொண்டு மக்களின் சமூக, பொருளாதார வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

இந்த கணக்கெடுப்பு மூலம் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள், நலிவடைந்த பிரிவு மக்கள் உரிய பலன்களை பெறுவர் என அம்மாநில அமைச்சர் பொன்னம் பிரபாகர் தெரிவித்துள்ளார். முன்னதாக பீகார் மாநில அரசு கடந்தாண்டும் ஆந்திர அரசு இந்தாண்டு தொடக்கத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருந்தன.