கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த பெரு மழையால் தலைநகரமே வெள்ளத்தில் மிதந்தது. பலர் வீடுகளை இழந்தும், பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழந்தார்கள். அதேபோல, தற்போது, தெலங்கானா மற்றும் ஹைதராபாத்தில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் காக்கிநாடா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றுக் கரையைக் கடந்ததால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை பெய்து தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
கடந்த 1916 ஆம் ஆண்டுக்குப்பிறகு எப்போதும் இல்லாத அளவுக்கு 24 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளதால், முழுக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இதனால், வெள்ள நிவாரண நிதியாக தெலுங்கு நடிகர்கள் விஜய் தேவாரகொண்டா 10 லட்சம் ரூபாயும், நாகர்ஜுனா 50 லட்சமும், ஜூனியர் என்.டி.ஆர் 50 லட்சமும், நடிகர் சிரஞ்சீவி 1 கோடியும், நடிகர் மகேஷ் பாபு 1 கோடியும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள். இதனை, அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள்.