விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் அந்த நிலத்தை விவசாயி ஒருவர் ரியல் எஸ்டேட் அதிபருக்கு விற்பனை செய்த நிலையில், நிலத்தை சமப்படுத்தும் போது ரியல் எஸ்டேட் அதிபருக்கு 5 கிலோ தங்கப் புதையல் கிடைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் பெம்பார்த்தி என்ற பகுதியை சேர்ந்த விவசாயி பலமுறை பயிரிட்டும் லாபம் கிடைக்காமல் நிலத்தை நரசிங்கா என்ற ரியல் எஸ்டேட் அதிபருக்கு விற்பனை செய்தார். அந்த இடத்தை வாங்கிய நரசிங்கா ஒரு வாரத்திற்கு பிறகு ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது விவசாய நிலத்தில் இருந்து 5 கிலோ எடையுள்ள பழங்கால தங்க ஆபரணங்கள் கொண்ட புதையல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் புதையலை பார்ப்பதற்காக திரண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.