ஆர்டிஓ அலுவலர்கள் கூகுள்
இந்தியா

தெலங்கானா | RTO ஆபிஸில் நடந்த ஏலம்.. 6 லட்சத்திற்கு விற்பனையான ஃபேன்ஸி நம்பர் பிளேட்! எகிறிய வசூல்!

கார் அல்லது இருசக்கர வாகனங்கள் மொபைல் எண்கள் போன்றவற்றை வாங்கும்பொழுது ஃபேன்ஸி எண்ணாக வாங்குவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும்.

Jayashree A

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத் RTO அலுவலகத்தில் Fancy TG நம்பர் ப்ளேட்டுகள் மொத்தம் சுமார் ரூ.20 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கார் அல்லது இருசக்கர வாகனங்கள் மொபைல் எண்கள் போன்றவற்றை வாங்கும்பொழுது ஃபேன்ஸி எண்ணாக வாங்குவதில் பலருக்குமே ஆர்வம் இருக்கும். பெரிய அரசியல்வாதிகள், முக்கிய புள்ளிகள், தொழிலதிபர்கள் போன்றவர்கள் தங்களின் கார் எண்களை ஃபேன்ஸி எண்ணாக வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். சிலர் நியூமராலஜிபடி எண்களை தேர்வு செய்வார்கள். இவர்கள் கேட்கும் எண்களை கொடுப்பதற்கு RTO ஆபிஸிற்கு கூடுதல் தொகையை செலுத்தவேண்டியிருக்கும்.

இந்நிலையில், தெலங்கானா அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் வண்டிகளின் நம்பர் ப்ளேட் ரிஜிஸ்டர் எண்ணை சுருக்கமான 'TS' என்பதிலிருந்து 'TG' என மாற்ற முடிவு செய்தது. இதனால் வாகனஓட்டிகள், பழைய வாகன நம்பர் பிளேட்டுகளுக்கும் இந்த அப்டேட் தேவையா என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தனர்.

ஆனால், புதிய வாகனத்தை பதிவு செய்ய விண்ணப்பிக்கும் வாகன உரிமையாளர்களுக்கு TG நம்பர் பிளேட் வழங்கப்படும். அதேசமயம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அதை மாற்ற வேண்டியதில்லை என்று அரசு அறிவித்து இருந்தது.

நேற்று தெலுங்கானா மாநிலத்தில் செகந்தராபாத்தில் ஃபேன்சி எண்கள் ஏலம் விடப்பட்டன. இதில் மூன்று ஃபேன்சி எண்கள் லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதில் TG 10 9999 என்ற நம்பர் பிளேட் 6,00,999 ரூபாய்க்கு ஏலம் போனதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணை வாங்குவதற்கு ஐந்து போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதே போல் 10A 0001 ஃபேன்ஸி எண்னை ரூ.3,60,000 க்கும் மற்றும் 10A 0009 ஃபேன்ஸி எண்ணை ரூ.2,61,000 க்கும் ஏலம் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், டிஜி ஃபேன்ஸி எண்களான டிஜி 09 0001, ஏலத்தில் ரூ. 9.61 லட்சத்திற்கும், TG 09 0909, 09 0005, 09 0002, 09 0369, மற்றும் 09 0007 ஆகிய நம்பர் பிளேட்டுகள் முறையே ரூ.2.30 லட்சம், ரூ.2.21 லட்சம், ரூ.1.2 லட்சம், ரூ.1.20 லட்சம் மற்றும் ரூ.1,07 லட்சத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது.

DG-10A005 என்ற ஃபேன்ஸி எண் 51,500 க்கு ஏலம் எடுத்ததாக தெரியவந்துள்ளது.

TG ரிஜிட்டர் ஏலம் மூலம் இந்த ஆண்டு 20 லட்சத்தை திரட்டியதாக தெரியவந்துள்ளது. ஏலத்தின் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.30,49,589 .என்று தெரியவந்துள்ளது.