ரேவந்த் ரெட்டி - திருநங்கை கோப்புப்படம்
இந்தியா

தெலங்கானா | போக்குவரத்துப் பணியில் திருநங்கைகள்.. புதிய திட்டம் அறிவிப்பு!

ஒதுக்கப்பட்ட பிரிவினரின் வேலைவாய்ப்பை நிவர்த்தி செய்வதற்கான திட்டத்தின்கீழ் தெலங்கானா அரசாங்கம், இந்தியாவின் முதல் திருநங்கைகள் சார்ந்த அரசு ஆட்சேர்ப்பு மற்றும் சமூக நலத் திட்டத்தை அறிவித்துள்ளது.

Prakash J

தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் வேலைவாய்ப்பை நிவர்த்தி செய்வதற்கான திட்டத்தின்கீழ் தெலங்கானா அரசாங்கம், இந்தியாவின் முதல் திருநங்கைகள் சார்ந்த அரசு ஆட்சேர்ப்பு மற்றும் சமூக நலத் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் திருநங்கைகள் போக்குவரத்து மேலாண்மைக்கு பயிற்சியளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என அது தெரிவித்துள்ளது. இதையடுத்து முதல்வரின் ஆலோசனைப்படி, ஹைதராபாத் போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக திருநங்கையரை பணியமர்த்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.

திருநங்கைகள்

இந்தத் திட்டத்தின்கீழ் திருநங்கைகளுக்குப் போக்குவரத்தை நிர்வகிக்க பயிற்சியளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்த திட்டத்தின்படி, திருநங்கைகள் அடையாளம் காணப்பட்டு பணியமர்த்தப்பட்டவுடன், அவர்கள் ஹைதராபாத் போக்குவரத்துக் காவல்துறைக்கு உதவ சிறப்புப் பயிற்சி பெறுவார்கள்.

மேலும், பணியமர்த்தப்பட்டவர்களுக்கு சமத்துவம் மற்றும் மரியாதையை உறுதி செய்வதற்காக சம்பளம் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட வேலைவாய்ப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென்று தனித்தனி சீருடைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆளும்கட்சி.. ராஜபக்சே கட்சியுடன் ஒப்பீடு!