தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளைக் காணிக்கையாகச் செலுத்தினார்.
முதலமைச்சரான பிறகு முதல் முறையாக திருப்பதி சென்ற சந்திரசேகரராவ், தங்க ஆரம் மற்றும் தங்கத்தினால் ஆன சாளக்கிராம மாலை உள்ளிட்ட 19 கிலோ எடையுள்ள ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டார். தெலங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியதால் அம்மாநில அரசின் சார்பில் இவை செலுத்தப்பட்டதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். சுதந்தர இந்தியாவில் மாநில அரசு ஒன்று கோயிலுக்கு இவ்வளவு அதிக மதிப்பில் காணிக்கை செலுத்துவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இதற்காக இரண்டு தனி விமானங்களில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் திருப்பதி வந்திருந்தனர்.