இந்தியா

தெலங்கானா: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

தெலங்கானா: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

Veeramani

தெலங்கானாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை நாளை முதல் மே 31 வரை தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.

மாநிலத்தில் உள்ள கொரோனா நிலைமையை ஆய்வு செய்தபின்னர், கல்வி நிறுவனங்களை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெலுங்கானா கல்வி அமைச்சர் சபிதா இந்திர ரெட்டி தெரிவித்தார்.

 “கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பதை ஜூன் 1 ஆம் தேதி அரசு மீண்டும் முடிவு செய்யும். 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை பரீட்சை இல்லாமல் அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சிபெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது” என்றும் சபிதா இந்திர ரெட்டி தெரிவித்தார்.

ஏற்கனவே டெல்லி, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறையை அறிவித்துள்ளன.