இந்தியா

பெங்களூர் முதல் வடகொரியா வரை: அதிர்ச்சியளித்த கால்டாக்ஸி ரேட்

பெங்களூர் முதல் வடகொரியா வரை: அதிர்ச்சியளித்த கால்டாக்ஸி ரேட்

rajakannan

டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலும் கால் டாக்ஸி பயன்பாடு அதிக அளவில் உள்ளது. அவர்களது சேவை எண்களை முடிந்த அளவிற்கு விளம்பரம் செய்துள்ளார்கள். நகரவாசிகளில் குறிப்பிடும் அளவிற்கு சிலர் ஆட்டோவிற்கு பதிலாக தற்போது கால்டாக்ஸிதான் பயன்படுத்துகிறார்கள். நகரத்தின் எல்லா பகுதிகளுக்கு இந்த கால் டாக்ஸிகளின் மூலம் செல்லலாம். 

ஆனால், பெங்களூருவில் இயங்கும் ஓலா கால்டாக்ஸி நீங்கள் விரும்பும் எந்த இடத்திற்கும் செல்லலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியானது. பெங்களூரில் உள்ள ஓலா பயன்பாட்டாளர்கள் நியூயார்க், கனடா, சவுதி அரேபியா, நார்வே, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணமாக கடந்த மூன்று நாட்களாக புக்கிங் செய்துவருகிறார்கள். 

பெங்களூருவை சேர்ந்த ரோகித் மெண்டா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓலா கால்டாக்ஸி புக் செய்த ஸ்கிரீன் ஷாட் ஒன்றினை பதிவு செய்து இருந்தார். மார்ச் 17ம் தேதி இந்த பதிவை போட்டியிருந்தார். அதில், பெங்களூருவில் இருந்து வடகொரியா செல்வதற்கு புக்கிங் செய்யப்பட்டு இருந்தது. 13,840 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.1,49,088 என்று அதில் தகவல் இருந்தது. மார்ச் 18ம் தேதி காலை 12.15 மணிக்கு தொடங்கும் இந்த பயணம் 5 நாட்கள் கழித்து 23ம் தேதி காலை 12.15 வடகொரியா சென்றடைகிறது. ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டு அதோடு, இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியையும் ரோகித் எழுப்பியுள்ளார். சிஸ்டத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள ஓலா நிறுவனம், இது ஒரு தொழில்நுட்ப கோளாரு என்று விளக்கம் அளித்துள்ளது. பயனாளியை தங்களுடைய போனை ரீசடார்ட் செய்யும்படி கேட்டுக் கொண்டது. ஆனால், பிரச்னை முடியவில்லை. நிறைய பயன்பாட்டாளர்கள் அந்த ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்துவிட்டனர். இது தொழில்நுட்ப கோளாரு என்று எல்லோருக்கும் தெரியும். இருப்பினும், ஒருவேளை உண்மையாக இருந்தால் சிறந்த ஆஃபராக இருக்கும் என்று நினைத்து புக்கிங் செய்துவருகிறார்கள். ஆனால், உண்மை அப்படியில்லையே, ஓலாவில் ஏற்பட்ட கோளாரே காரணம் என்றும் இந்தியாவுக்கு வெளியே ஓலா கால்டாக்ஸி சேவை கிடையாது என்பதும் தெளிவுப்படுத்தியுள்ளது.