ஊக்கப்படுத்தும் ஆசிரியை புதியதலைமுறை
இந்தியா

‘நெஞ்சில் வலிமை கொண்டு ஓடு..’ குழந்தையை ஊக்கப்படுத்திய ஆசிரியை.. இணையவாசிகளை நெகிழவைத்த வீடியோ!

ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடிய மாற்றுத்திறனாளி சிறுமியை உற்சாகப்படுத்தியுள்ளார் ஆசிரியர் ஒருவர்.. அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆசிரியையை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். இச்சம்பவம் எங்கு நடந்தது? முழுமையாக பார்க்கலாம்.

யுவபுருஷ்

கேரள மாநிலம் வயநாடு அருகே வைத்திரி பகுதியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. அப்போது, ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடிய 3ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் ஒருவர் உற்சாகப்படுத்தியுள்ளார். மாணவியுடன் ஓடியபடி, ‘இன்னும் வேகமாக ஓடு‘ என்று உற்சாகப்படுத்தியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, குழந்தையை ஊக்கப்படுத்திய ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வாழ்க்கையில் சாதிக்கும் பெரிய காரியங்களுக்கு சிறுசிறு உந்துதல்களே காரணமாக இருக்கும் நிலையில், ஓட சிரமப்பட்ட குழந்தைக்கு உந்துதலாக ஊக்கமளித்த ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர். கீழுள்ள இணைப்பில், அந்த காணொளியை பார்க்கலாம்...