கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் செங்கன்னூர் - வெள்ளவூர் ஜங்ஷன் ரோட்டில் நடைபாதையில் பெண் ஒருவர் டீ கடை நடத்தி வந்துள்ளார். நடைபாதையில் கடை இருப்பதால், அதனை அக்கற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த பெண், டீ போட தயார் செய்துவைத்திருந்த பாலை அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது அப்படியே வீசியுள்ளார். எஸ்ஐ உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடலில் பாலை ஊற்றியதாகவும், ஆனால் பால் சூடு இல்லாதல் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
பெண்ணை அதிகாரி சமாதானப்படுத்த முயன்றபோதும், அதை காதில் வாங்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியான தள்ளுமுள்ளுக்கு பிறகு மாநகராட்சி அதிகாரிகள் கடையை அகற்றினர்.
இந்த தள்ளுமுள்ளில், நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது