இந்தியா

தெருவோரங்களில் வசிப்பவர்களுக்கு காசநோய் அபாயம் 5 மடங்கு அதிகம்..!

தெருவோரங்களில் வசிப்பவர்களுக்கு காசநோய் அபாயம் 5 மடங்கு அதிகம்..!

Rasus

தெருவோரங்களில் வசிப்பவர்களுக்கு காசநோய் வரும் அபாயம் மற்றவர்களை காட்டிலும் 5 மடங்கு அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள், தெருவோரங்களில் வசிப்பவர்களிடம் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர். இதில் மற்றவர்களை காட்டிலும் தெருவோரங்களில் வசிப்பவர்களுக்கு காசநோய் வரும் அபாயம் மற்றவர்களை காட்டிலும் 5 மடங்கு அதிகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட சுகாதாரத்தை மேற்கொள்ள அவர்களுக்கு போதிய வசதிகள் கிடைப்பதில்லை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. அதனால் அதிக அளவில் அவர்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் காசநோய் பாதிப்பை சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.