பெங்களூருவின் சர்வதேச விமான நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால், டாக்ஸி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை, மாநில அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும் பிரதாப் (32) என்ற ஓட்டுநர் விமான நிலையத்திற்கு வெளியே தற்கொலைக்கு முயன்றார். அவர் தனது காரில் இருந்து மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அதிகாலை 1.45 மணியளவில் ர்இறந்துவிட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி சி.கே.பாபா தெரிவித்தார். அவரின் தற்கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை, பிரதாப்பின் காயங்களின் அளவு காரணமாக அவரை விசாரிக்க முடியவில்லை என்றும் பாபா கூறினார். இதனால் இன்று காலை, மற்ற ஓட்டுநர்கள் ருபோராட்டத்தை நடத்தினர். இது டாக்ஸி சேவைகளைத் பாதித்தது. விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் நிலைமையை நிர்வகிக்க அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக பெங்களூரு சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "பெங்களூரு விமானநிலையத்தில் உள்ள டாக்ஸி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் பி.எம்.டி.ஆர் பஸ் சேவையை பி.எல்.ஆர் விமான நிலையத்திற்கு மற்றும் அதன் பயணங்களுக்கு பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் அல்லது தங்களது சொந்த பயண ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.