டாடா குழுமம் எக்ஸ் தளம்
இந்தியா

மொத்த கடனும் அடைப்பு.. ஷாக் ஆன ஆர்பிஐ.. பக்கா பிளான் போட்ட டாடா குழுமம்!

டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ், இந்திய ரிசர்வ் வங்கியிடம் (ஆர்பிஐ) தானாக முன்வந்து பதிவுச் சான்றிதழை ஒப்படைத்துள்ளது.

Prakash J

நாட்டின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் டாடா குழுமமும் ஒன்று. இக்குழுமத்தின் ஹோல்டிங் கம்பெனியான டாடா சன்ஸ், ஒரு தனியார் முதலீட்டு நிர்வாகமாக இயங்கிவந்த நிலையில், ஆர்பிஐயின் விதிமுறை காரணமாக அந்த நிறுவனம் பங்குச்சந்தைக்கு வரவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. அதாவது, 'இந்தியாவில் செயல்படும் அனைத்து NBFC நிறுவனத்தின் அப்பர்லேயர் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கட்டாயம் பட்டியலிடப்படுத்தப்பட வேண்டும்' என அதிகாரப்பூர்வ விதிமுறை விதிக்கப்பட்டது.

அந்த வகையில், டாடா கேப்பிடல் நிறுவனத்தின் அப்பர்லேயர் NBFC-ஆக டாடா சன்ஸ் நிறுவனத்தை ஆர்பிஐ கடந்த 2022ஆம் ஆண்டு அடையாளம் கண்டது. இதன்படி செப்டம்பர் 2025-க்குள் டாடா சன்ஸ் நிறுவனம், மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட வேண்டும். ஆர்பிஐ இந்த விதிமுறையை விதித்த நாளில் இருந்து டாடா சன்ஸ் நிர்வாகம் விதிமுறைக்கு இணங்க வேண்டி இருந்தது. அதேநேரத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதை நிறுத்த வேண்டும் என டாடா சன்ஸ் திட்டமிட்டது.

இதையும் படிக்க: சிக்னல் இல்லை.. சவூதி பாலைவனத்தில் வழிதவறிப் போன இந்திய நபர்.. நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!

இதன் விளைவாகவே, 20,300 கோடி ரூபாய் கடனை மொத்தமாக அடைத்துவிட்டு டாடா சன்ஸ் தனது பதிவுச் சான்றிதழைத் திருப்பி கொடுத்துள்ளது. இதன்மூலம் டாடா சன்ஸ் தொடர்ந்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாமல், தனியார் நிறுவனமாகச் செயல்பட முடியும்.

மேலும் இந்நிருவனத்துக்கு தீர்க்கப்பட வேண்டிய கடனில், ரூ.363 கோடி மதிப்புள்ள மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மற்றும் விருப்ப பங்குகளும் உள்ளன. இதற்காக டாடா சன்ஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் ரூ.405 கோடி வைப்புத்தொகை வைத்துள்ளது. இந்த விபரத்தை டாடா சன்ஸ் தனக்கு கடன் கொடுத்தவர்களுக்கு மட்டும் அல்லாமல் ஆர்பிஐ-க்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2024ஆம் நிதியாண்டின் அறிக்கையின்படி, மார்ச் 2024 முடிவடைந்த நிதியாண்டில், டாடா சன்ஸின் நிகர லாபம் 57% அதிகரித்து, ரூ.34,654 கோடியை எட்டியது. 2024ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 25% அதிகரித்து ரூ.43,893 கோடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இது ரூ.35,058 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல் | இத்தனை மில்லியன் டாலர்களா?.. ஒரே மாதத்தில் அதிக நிதி திரட்டிய கமலா ஹாரிஸ்!