கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டதன் எதிரொலியாக, தமிழக-கேரள எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த இரு தினங்களில் 31லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளன.
கேரளாவில் கொரோனா பரவலால், அங்குள்ள மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டை ஒட்டியுள்ள நீலகிரியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்குவதற்காக மக்கள் குவிந்து வருகின்றனர்.
எல்லையில் உள்ள, வதாளூர், நம்பியார்குன்னு, அய்யன்கொல்லி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மூன்று கடைகளில் மட்டும் கடந்த இரு தினங்களில் 30லட்சத்து 50ஆயிரம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.