இந்தியா

ஹீரோவாக மாறிய டிரைவர்: தீப்பிடித்த பெட்ரோல் டேங்கர் லாரி!

ஹீரோவாக மாறிய டிரைவர்: தீப்பிடித்த பெட்ரோல் டேங்கர் லாரி!

webteam

பெட்ரோல் பங்கில் திடீரென தீப்பிடித்த, பெட்ரோல் டேங்கர் லாரியை உயிரைப் பணயம் வைத்து யாருமில்லாத இடத்தில் கொண்டு சேர்த்த டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு, பெட்ரோல் டேங்கர் லாரி வந்துள்ளது. பெட்ரோல் சப்ளை செய்யவந்த அந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதையடுத்து லாரியின் பின்புறம் தீப்பற்றி எரிய, அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். இதனால் அந்த இடமே பதற்றமானது. இதையடுத்து பெரும் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக, சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர், உயிரைப் பணயம் வைத்து டேங்கர் லாரியை யாருமில்லா இடத்தில் கொண்டு நிறுத்தினார். இருப்பினும் இந்த தீவிபத்தில் டிரைவர் காயமடைந்தார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாமர்த்தியமாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்த அந்த டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.